நிலா முற்றத்தில் தினமும் நின்று
பறக்கும் என் கற்பனை காகிதத்தில்
மலரும் ஓர் அரும்பு கொண்டு
தென்றலின் கரம் பிடித்து -நானும்
சிலகாலமாய் எழுதினேன்
சிறப்பாய் ஒரு கவிதை
'கரங்கள் இன்றி அதை பிரித்து
கண்கள் இன்றி அதை படித்து
புரியாத மனதால் புரிந்து
புன்னகைப்பாய் என் மன்னனே'
அதிகாலையிலே உன்கரம் வந்தடைய
கொடுத்து விட்டேன் நிலாவிடம்
நீயும் வாங்க நினைக்கையிலே!
வீழ்ந்ததே என் கவிதை
மலர்களின் தோட்டத்திலே!
அதை பார்த்த பனித்துளிகள்
ஆர்வமாய் திருடி செல்ல
நனைந்ததே என் கவிதை
இனி நான் என் செய்வேன்?
சூரியனாய் நீ வந்து
பனித்துளிகளை மறைய செய்வாய்
இனி என் கவிதை தோட்டத்தில்
பனித்துளிகள் என்ற
எதிரிகள் இல்லாமல் ---சாஷீ
இனி என் கவிதை தோட்டத்தில்
ReplyDeleteபனித்துளிகள் என்ற
எதிரிகள் இல்லாமல்//////////அருமையான வரிகள்,,,மிகவும் ரசித்தேன்.
வருகைக்கும் வந்து ,ரசித்ததற்கும் நன்றி
ReplyDelete