சற்று தாமதமாகவே படம் பார்க்க நேரிட்டது நண்பர்களிடம் சொல்லவேண்டும் போல்தோன்றியது ,படத்தைப்பற்றிய கருத்து மட்டுமே, இளையதளபதி மேல் எந்த கடுப்பும் கிடையாது.
குருவி ,வில்லு வேட்டைக்காரன் அப்போ அடுத்த படம் பாசிமணி இல்ல ஊசிமணி ங்களா ஆபீசர்??
தலைப்பு வைத்து விட்டோமே என்பதற்காக ஆரம்பத்தில் ஒரு குதிரை சீனில் ஆரம்பித்த படம் ரெண்டு சீன்களிலேயே புரிந்து விட்டது.இந்த கதைய இப்பதானடா எங்கயோபாத்த மாதிரி இருக்குன்னு யோசிச்சா... புரட்சி தளபதி விஷால் {???எங்க போய் சொல்ல }நடிப்பில் வந்த சத்யம்,சீயான் நடிப்பில் வந்த பீமா என்ற இரண்டு மெகா டூப்பர் சூப்பர் ஹிட்!!!!! படங்களை கருத்தில் இல்லை இல்லை கையில் எடுத்து இவருக்கு ஏற்றமாதிரி கலந்தடிக்கிறார்கள் என்று பார்த்தால் சிமென்ட் தூணை உடைப்பதில் ஆரம்பிக்கிற காமெடி க்ளைமாசில் கார் ஸ்டீயரிங்கை கழட்டி வில்லன்களை அடிப்பதுவரை தொடர்கிறது.
தளபதியின் கால்கள் டயலாக் பேசும்போதுமட்டும் தரையில் நிற்கிறது, மனுஷர் பறந்து கொண்டே இருக்கிறார். படத்தின் கதை வேறொன்றுமில்லை "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியிதர்மமே வெல்லும் என்ற சூத்திரம்" தான்..முக்கிய செய்தி இந்த கதையை கில்லி படம் வரும்போதே இயக்குனர் சொன்னாராம்.
அந்த சூட்டோடு பல்லி ன்னு எடுத்திருக்கலாம் சரி போட்டு. வடிவேலு அண்ணன் இல்லையே என்ற வருத்தத்தையும் அவரே நீக்கி இருப்பதோடு அவருக்கு சவால் விடும் அளவுக்கு காமெடியில் பின்னி ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை புத்தாண்டு பரிசாக தந்திருப்பது பாராட்டுக்குரியதே.!!
வடிவேலு வுடன் நடித்த அனுபங்கள் கை கொடுத்திருக்கிறது.
கதாநாயகி "அருந்ததி அனுஷ்கா" மற்றவர்கள் போலவே நாயகனுடன் முதல் ஐந்து சீன்கள் முறைப்பதும்பின்னர் ஆறாவது சீனில் புடிச்சிருக்கு ன்னு சொல்ற தமிழ் சினிமா விதியில் அவர் என்ன பெரிய நடிப்பை காண்பிக்க முடியும்?,ஆனாலும் ஸ்ரேயாவுக்குபோட்டியிடும் அளவுக்கு இடுப்பை ஆட்டவைதிருக்கிரார்கள் வில்லனாக ஒரு பனங்கொட்டை தலயரை நடிக்க வைத்திருக்கிறாகள்.
அவுரு பயம் பயம்னு கதாநாயகன் காதுல சொல்லும்போது விட்டலாச்சாரியா படம் பாக்குறஉணர்வு {கொய்யால கொடும படுத்து ராய்ங்க} நம்மாட்களுக்கா பஞ்சம் வினு சக்கரவர்த்திய {ஆங் }விட்ருந்தா மனுஷன் பின்னிருப்பார்.
சக நடிகர் நடிகைகள் கனகச்சிதமாக அந்த அந்த பாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள் என்று சொன்னா அது ரொம்ப தப்பு, மாணிக்கவினாயகதுக்கு பதிலா லொள்ளு சபா மனோகர் இருந்தால் படம் விருதை நோக்கி நகர்ந்திருக்கும் என்பது என் கருத்து.
தேவராஜ் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடிதிருப்பவரை பார்க்கும்போதெல்லாம் வயிற்றில் அஜீரணம் ஏற்படுவது போல் ஒரு உணர்வு. இசையை பொறுத்தமட்டில் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் வி.ஆண்டனி.
"கரிகாலன்காலப்போல" பாடலில் கபிலனின் வரிகள் அடிக்கடி முணுமுணுக்க செய்கிறது. நடனத்தில் தளபதி தளபதிதான், பட்டையை கிளப்புகிறார், குறிப்பாக "ஒரு சின்ன தாமரை" பாடலில்அருமையான அசைவுகள் ???!!!!!???!!?? என்னதான் சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்க வாய்ப்பில்ல, .இதான் படத்தின் முடிவு என்ன சொல்ல வந்தாங்கன்னு கடைசி வர புரியல. உங்க நேரத்த வீண்டிசிட்டேன்னு நினைக்குறேன்... மன்னிச்சிக்குங்க.
நான் படம் பார்த்த அன்று தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் யாருக்கும் தெரியாமல் திரை அரங்கை ஒரு படம் எடுத்தார் உடன் வந்த அண்ணன் பதிவர் "தமிழன் எட்வின் "அது உங்கள் பார்வைக்காக மேலே .{ஹி ஹி மொத்தம் ஏழு பேர் பார்த்தோம் கவுண்டரில் நின்றவர் உட்பட ...இடம் __அஜியால் காம்ப்ளக்ஸ் .பாஹீல் குவைத் }
படம் பார்த்த பார்க்க இருக்கும் நண்பர்களே ஒரு சீன்லயாவது லாஜிக் என்ற விஷயம் இருக்கிறது என்று கண்டு பிடித்தால் சொல்லுங்க {என்னத்த கண்ணையா சொன்னமாதிரி இருக்கு அனா இல்ல } நன்றி மீண்டு{ம்} சந்திப்போம்.
ஏனப்பா! இதுல நம்மள வேற கோர்த்து விடணுமா
ReplyDeleteஒரு சின்ன தாமரை" பாடலில்அருமையான அசைவுகள் ???!!!!!???!!?? என்னதான் சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்க வாய்ப்பில்ல, ////////////புரிஞ்சிடிச்சு!
ReplyDeleteலாஜிக்1 - விஜய் 12'ம் கிளாஸ்'ல் 4 தடவ தோத்துப் போனது.
Nice Wording and your expression also good..
ReplyDeleteAlso visit my blog http://www.linelogesh.blogspot.com/
good review
ReplyDeleteபாஹில்லில் விஜய்/தமிழ் படம் போடறாங்களா?
ReplyDeleteநான் அங்க 6 வருடத்திற்கு முன் இருந்தேன்
:)
நன்றி linelogesh மற்றும் sarvan
ReplyDeleteயாசவி அவர்களே வருகைக்கு நன்றி, நான் வந்து மூன்று வருடம் ஆகிறது தமிழ் மட்டுமல்ல இந்திய மொழி படங்கள் எல்லாமே வருகிறது ..டிக்கெட்டையும் போட்டுருக்க வேண்டியது மறந்துட்டேன்.
ReplyDelete