Monday 11 January 2010

ஊருக்கு போறேன்

பணியின் நிமித்தம் குவைத் என்னும் வளைகுடா நாட்டிலே வசித்து வரும்
நான்பிறந்தது கன்னியாகுமரியில்ஆம் ,பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்
தமிழ் நாட்டிலே பிறந்த நான் மட்டும் என்ன விதிவிலக்கா {எல்லாம் பில்டப்தான் }.

ஊரில் இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து வரும்நபர்களை
பார்த்திருக்கிறேன் தடபுடலாக இருக்கும் ,அவர்களின் வீடே களை
கட்டும் வந்திருப்பவரை கண்காட்சிபொருள் போல் பார்ப்பார்கள் சந்தேகம் வேண்டாம் நான் கிராமத்துக்காரன் ,நானும் அப்டி பார்த்திருக்கிறேன் அப்போதெல்லாம் நினைத்திருக்கிறேன் நானும் இப்படி ஒரு நாள் ப்ளேன் ல வந்து இறங்கணும்னு .சரி விஷயத்துக்கு வர்றேன் .அப்டியே என் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது ஆமாங்க இது ரெண்டாவது முறையா லீவுக்கு போறேங்க இதுல என்ன விஷயம் ?? இதுல ஒண்ணுமில்ல இருந்தாலும் என் முதல் விடுமுறை
அனுபவத்தை சொல்லணும்போல தோணிச்சு

போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி அம்மா கிட்ட போன் பண்ணி
எத்தன மணிக்கு வருவேன் அவுங்க எப்போ வரணும் ,என்ன பொருட்களெல்லாம் வாங்கி இருக்கேன் என்பதை சொன்னேன்,எல்லாவற்றையும் கேட்டுகொண்டே {அழுதாங்க ,சந்தோஷத் துலதான்} எய்யா நல்ல படியா வந்து சேருயா, ன்னு சொல்லிட்டு என்ன சாப்பாடு மக்கா வைக்கணும்ன்னு கேட்டாங்க .நான் ஒரு சா பி {சாப்பாட்டு பிரியன் }பழைய கஞ்சியும் கிழங்கு கரியும்னு சொன்னேன் ,சரி மக்கான்னு சொன்னாங்க .

இப்படியாக பயணம் ஆரம்பிச்சு வீடு போய் சேர்ந்தேன் அனா என்ன கூட்டிட்டுபோக என் அக்காவும் ,அத்தானும் {அக்கா கணவர்} அவர்களுடைய அம்பாசிடர் காரில் வந்திருந்தார்கள் .காலை 6 மணி ஆகி இருந்தது போற வழியில் அக்கா பாசத்திற்காக ஒரு கடையில் சாப்பிட்டோம் ,நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன் ,
வருவதற்கு முன் சில தொலை பேசி அழைப்புகள் எங்கு வந்து கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லிகொண்டிருந்தார்கள் .வீட்டு முன் வண்டி நின்றது அப்பா, அம்மா ,அண்ணன், அண்ணன் குழந்தைகள் ,தம்பி, கொஞ்சம் ஊர் பெரிசுகள் நின்று கொண்டிருந்தார்கள் எல்லோரையும் பார்த்து ஒரு குசலம் விசாரித்து விட்டு .அப்பா காலை தொட்டு வணங்கி எழும்பியபோது என் அம்மா, என்ன பண்ணுவாங்க ஒரே அழுகைதான் நானும் அது வரை சந்தோஷமாய் இருந்தவன் கண்ணீர் மல்கியது என்பார்களே
அந்த மாதிரி ஒரு சூழல் .எல்லோருக்கும் இனிப்புகளை எடுத்து கொடுத்தார்கள் .
அதே நேரத்தில் அம்மா நான் கேட்டிருந்த சாப்பாட்டை போட்டு வைத்து மொதல்ல சாப்டு மக்கா ன்னு ,சொல்லவே சரி கை கால் கழுகலாம் என்று நினைத்து ,சட்டையை கழற்றி கொண்டிருந்தேன்.
நண்பர்களே நான் இவ்ளோ நேரம் சொல்ல வந்ததே இதுக்காகத்தான்
கொஞ்சம் பொறுமையாக வாசித்து முடித்துவிடுங்கள்,

அந்த நேரத்தில் முதுகிலே லேசாக தட்டி ""டே இந்த நெல்லு மூட்டைய {சுமார் 3 மூட்டைகள் இருக்கும் }எடுத்து வண்டில போட்டுரு"" ன்னு அப்பா சொன்னார் .அப்டி திரும்புனேன்

.அக்காளுக்காக வாங்கி போட்டுருந்துச்சுடே நேத்துதான் நெல்லு காஞ்சுது கெட்டி வச்சோம்னு சொன்னார் பாருங்க .,மனசுக்குள்ளாடி நான் வெளிநாட்டுல இருந்து வந்து ரெண்டு மணிநேரம் கூட ஆகல இங்க என்ன நடக்கு !!!ஒரு மரியாத இல்ல நம்ம இவ்ளோ பெரிய காமெடி பீசோ ?? ன்னு நினச்சேன்,நல்லவேள தம்பி இத பாத்துட்டுவேண்டாண்டே நான் எடுத்து வைக்குறேன்னு சொன்னான் .இருந்தாலும் உதவி செய்தேன்.

அப்போ அத நினைக்க கொஞ்சம் காமெடியாகவே தோன்றியது .ஆனால் அவருடைய பாசத்தை {எங்க போனாலும் நீ எம்புள்ளடா ன்னு} அப்டி காண்பித்திருக்கிறார் என்று நினைத்து கொண்டு எனக்குள்ளே கொஞ்சம் அழுதுகொண்டேன் .இந்த முறை கிடைக்கும் மரியாதையை வரும் பதிவுகளில் சொல்லுகிறேன் .நான் ஊருக்கு போறேன்! ஊருக்கு போறேன்!! ஊருக்கு போறேன் !!!

22 comments:

  1. வடிவேல் ஜெயில்'க்கு போன சந்தோஷம் , ஊருக்குப் போறேன்னு வச்ச டைட்டில்'ல இருந்தே தெரியுது .
    எதிர் பாராத 'கிளைமாக்ஸ்',கலக்கிடிச்சு -மௌனம் பேசியதே படத்தோட திரை விமர்சனத்துல
    'சினிமா காரர்களாலே கூட யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்'னு படிச்ச ஞாபகம் வருது இப்போ.

    ReplyDelete
  2. கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. *பழைய கஞ்சியும் கிழங்கு கறியும்...///super ஸ்பெஷல்.

    *கொஞ்சம் அழுதுகொண்டேன் ..//பரிதாப பட வைக்கிறார்.

    *நான் ஊருக்கு போறேன்...//சுவாராசியமான அசத்தலான அனுபம்:- இனிமை.

    ReplyDelete
  4. நன்றி ராஜேஷ் அவர்களே

    ReplyDelete
  5. //""டே இந்த நெல்லு மூட்டைய {சுமார் 3 மூட்டைகள் இருக்கும் }எடுத்து வண்டில போட்டுரு"" ன்னு அப்பா சொன்னார்//

    அது தாண்டா மெய்யான பாசம். தகப்பன் பேச்ச கேக்கிறத விட சுகமான அனுபவம் வேற என்ன இருக்க முடியும்... அதுவும் ஒரு வருஷத்துக்கு அப்புறம் அப்பா ஒரு விஷயம் சொல்றாருண்ணா அத சந்தோஷமா செய்ய வேண்டாமா.

    //ஒரு மரியாத இல்ல நம்ம இவ்ளோ பெரிய காமெடி பீசோ ?? ன்னு நினச்சேன்//

    அரபுக்காரனுவ எள்ளுண்ணா நீங்க எண்ணெயா போய் நிக்கிறதில்ல!? அப்போ எல்லாம் காமெடி பீசா நினக்க தோணாம இப்போ அப்பா ஒரு வேல செய்ய சொன்னதும் காமெடியா இருக்கோ!

    உங்க ஊர் எழுத்து நடையில் கலக்கியிருக்கீங்க... சில பிழைகளை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

    ReplyDelete
  6. நன்றி அண்ணே {தமிழன் எட்வின் } மாநில விருது வாங்குன மாதிரி இருக்கு .பிழைகளை தவிர்க்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  7. சாஷீ,டிக்கெட்டை மறந்துடாதிங்க….. உங்கள் பயணம் இனிதாகவும்,திட்டங்கள் வெற்றிகரமாக அமையவும் வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  8. உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.....பொக்ஷ்மான நினைவுகளோடு திரும்பி வாருங்கள்.....

    ReplyDelete
  9. நல்ல அனுபவப்பகிர்வு நண்பரே..
    தங்கள் பகுதிப் பேச்சு வழக்கை அறிந்து கொள்ளவும்..

    பாசம்
    உறவுகளின் உணர்வுகளை நன்கு பதிவு செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
  10. தங்கள் உணர்வுகளை இடுகைவாயிலாக அழகாகப் பிரதிபலித்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  11. அருமை.......
    உன் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நன்றி ராஜேஷ் மற்றும் வனிதா ராஜ்குமார் அவர்களே,

    ReplyDelete
  13. முனைவர்.இரா.குணசீலன் மற்றும் திரு. சுரேஷ் உங்கள் வாழ்த்துதல்களுக்கும் நன்றி

    ReplyDelete
  14. charles.......really good performance,experience..... wonderful...

    ReplyDelete
  15. keep it up........waiting for another good new experience....to read

    ReplyDelete
  16. மிக்க நன்றி ஜாய் ,வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  17. Thambi - very nice - this blog made me remember my first vacation when i went home from Saudi.wish u a happy journey and enjoy your leave ........

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. என்னவோ திட்டி எழுதிட்டு அளிசிருக்கீறு போல தெரியுது

    ReplyDelete
  20. really great feeling after i was reading ur lovely thoughts..........
    some lines really makes me feel............
    nice thoughts.............
    god bless you ever......
    aththan babu

    ReplyDelete
  21. niraiya chapittu vittu konjam azhuthu irukkan.unakku 3 moodai konjam kuraivuthan

    ReplyDelete