Thursday, 21 October 2010

பேஸ்-புக் { கொஞ்சம் கவனமா பேஸ் பண்ணுங்க}

கடந்த வாரம் என்னுடன் பணி புரியும் இந்தோனேசிய நண்பர்களுடன் அவர்களது தொலைகாட்சி சேனல்  பார்த்துக் கொண்டிருந்தேன் ,புரிய வில்லை என்றாலும் அவ்வப்போது அவர்கள் சொல்லி தந்தார்கள் ,அதில் ஒரு தாயார் கதறி அழுவதையும் ,அதை தொடர்ந்து  face book  ஐயும் அதில் ஒரு பெண்ணின் profile  பக்கத்தையும் சுட்டி காண்பித்து கொண்டிருந்தார்கள் ,எதோ விபரீதம் என்று புரிந்து   கேட்டேன் ,என்ன வென்று  ?
                  
 அவர்கள் சொன்னது face book கில் காண்பித்த அந்த பெண் இந்த தாயின் மகள் என்றும் அவளை உள்ளூரை சேர்ந்த சிலர் கடத்தி சென்று விட்டார்கள் என்றும் . எனக்கு பக்கென்றது அடப் பாவிகளா எப்புடியெல்லாம் ரூட் போடுராயங் க !!
               நிஜமாகவே கஷ்ட மாகத்தான் இருக்கு ,இந்த அளவுக்கு face book க்க 
use     பண்ணுன புள்ளைய நொந்துக்குறதா ,இல்ல கடத்துன காவாலி    பயலுகள  நொந்துக்குறதா  ன்னு புரியல!  இது  நமக்கு ஒருnews  ஆ இருக்கலாம் , நம்ம நண்பர்களுக்கு வராம இருக்கணும் கொஞ்சம் கவனமா இருங்க குறிப்பா பெண் தோழிகள்  
                                       அதுக்காக அப்டி பண்ணுங்க இப்படி பண்ணுங்க ன்னு சொல்லி கருத்து சொல்ல விரும்பல  ,உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல.நானெல்லாம் முழிக்கிறதே face book  ல தான் என்னங்க பண்றது விடாது கருப்பு மாதிரி ஆயிருச்சி .நம்ம மக்கள கடத்துனாங்கன்னா பீல் பண்றது  கடத்துவனா தான் இருக்கும் ,அவுனுக கூட நின்னு போட்டோ எடுத்து அதையும் face book  ல புது ஆல்பம் போடும் அதுக்கும் நம்ம பய புள்ளைக  cute ,cool,lol,wow awesome ன்னு கம்மன்ட் எழுத ஒரு கூட்டம் ரெடி யா இருக்கும்.{ சரி போட்டு ஹி ஹி charles pravinஇதான்
என்னோட face book  id  வாங்க பழகலாம்  }

Tuesday, 10 August 2010

குற்றம்!! நடக்காதது என்ன ??


ஏழு மாதங்களுக்கு பின் வாசிக்கவிருக்கும் ந{ண்}பர்களே வணக்கம்,
என் எழுத்துக்களை படித்துவிட்டு ஒரு சிலர் என்னை தனியாக தொடர்பு கொண்டு தயவு செய்து தாங்கள் எழுதுவதை நிறுத்துங்கள் எங்களின் வலைபதிவுகள் பாதிக்கபடுகிறது என்றும் குறைந்தது ஒரு ஐந்து மாதமாவது எழுதாமல் இருங்கள் என்று கண்ணீருடன் கதைத்தனர் {உதாரணம் சொல்ல வேணும்னா கிறிச்சான் என்று பதிவர் ஒருவரஉருவாக  வழி விட்டுருக்கிறேன் என்று சொல்லலாம்} ,ஐந்து எனக்கு ராசி இல்லை
அதான் இந்த ஏழு மாச கேப்பு {இடை வெளி} சரி ,இவ்ளோ நாளு எங்க போய் தொலஞ்ச ?அதானே !ஒண்ணுமில்ல எதுக்குடா இப்புடி ஒன்ன ஆரம்பிச்சேன்னு நொந்து கிட்டேன் ,இருந்தாலும் பல தலை சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மொக்கை போடும் வேல செஞ்சேன் ,பல கருத்தரங்கங்கள் ,டீ கடை பெஞ்சு ,கலந்துரையாடல்கள்.இப்படி அறிவை பெருக்கி கொண்டேன் என்று சொல்லலாம் .சரி விசியத்துக்கு வர்றேன் இந்த ஏழு மாசத்திலையும் பதிவ எழுதலங்கற என்னுடைய எழுத்து தாகத்த தீக்கணும் ,எல்லா துறைகளையும் அலசி ஆராயணும் அதான் இந்த பதிவு .
ஆமாங்க நா எழுத நினைச்சதும் அதுல எனக்கு இருந்த அறிவும் {அப்பாடா மேட்டர்க்கு வந்துட்டேன்}
1.அரசியல் = தி.மு.க எவ்ளோதான்நல்லதுசெஞ்சாலும் தானைதலைவர் விஜயகாந்தின்ஆட்சிதான் தமிழ்நாட்டிற்கு விடிவு.......................இப்படி பலஅலசல்கள்
2 .வணிகம் = உழவர் சந்தை முதல் பங்கு சந்தை வரை அனேக பார்வைகள் அலசல்கள்
3.சினிமா = வேட்டி கட்டி ஊர் பாஷை பேசி ஒரு மல்லு பிகரை கதாநாயகியா போட்டு அனேகபடங்களஇதஎல்லாம்விம்மர்சனம் எழுதி உங்கமத்திலபேர் வாங்கனும்னு நினச்சேன்
4.விளையாட்டு =கோக்கோ முதல் கால்பந்து உலக கோப்பை வரை எழுதி தள்ளி இருப்பேன்
5.நகைச்சுவை =ஹி ஹி ஹி வாசிச்சி உங்க வயிறெல்லாம் புண்ணா போயிருக்கும் ,{அதான் எழுதலன்னு சொல்லிட்டம்லா அப்புறம் ஏன் வெறியோட பாக்குறீக }
6.சமையல் = k f c,mc donalds,knife chicken,shrimpy,dominos pizzaசிறுபயறு கஞ்சி ன்னு நா சாப்ட்ட போட்டோகளையாவது போடணும்னு ஒரே பசி ஆமாங்க எழுத்து பசி .
7.உலகப்பார்வை =ஒபாமா ல இருந்து ஒசாமா வரை புட்டு புட்டு வச்சிருப்பேன் {மலையாளி கட புட்டு சாப்ட தாம்ல நீ லாயக்குன்னு கத்தார்ல இருந்து ஒரு சவுண்டு வருதே}
8.விவசாயம் =தென்னை சாகுபடி பத்தி எழுதணு ங்கறது என் நீண்ட நாள் ப்ராசக்ட்டு
9.சிறுகதை =இதுக்காக பழைய வாரமலர் லாம் சேத்து வச்சிருந்தேன்.{சரி என்ன பண்ண !!
10."அப்ரூவர் "==== "இது தலைப்பு இல்லங்க இதான் சொல்ல வேண்டிய முக்கியமான் பதிவு மேல சொன்ன எந்த தலைப்பு பத்தியும் துளி கூட யோசனை கிடையாது ,உண்மைய சொன்னா உனக்கெல்லாம் எதுக்குடா இந்த வேல மூடிட்டு போ அப்டின்னு என்ன பாத்து நானே கேட்டுட்டு,விவரமும் போதாது ,ஆகையால் ஒழுங்கா எழுதுற மக்களோட பதிவ படிக்கலாம்னு முடிவு பண்ணி ,நான் அப்ரூவர் ஆயிட்டேன் நீங்களா பாத்து என்ன தண்டன குடுத்தாலும் ஏத்துக்குறேன் சாமி ..

Monday, 11 January 2010

ஊருக்கு போறேன்

பணியின் நிமித்தம் குவைத் என்னும் வளைகுடா நாட்டிலே வசித்து வரும்
நான்பிறந்தது கன்னியாகுமரியில்ஆம் ,பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்
தமிழ் நாட்டிலே பிறந்த நான் மட்டும் என்ன விதிவிலக்கா {எல்லாம் பில்டப்தான் }.

ஊரில் இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து வரும்நபர்களை
பார்த்திருக்கிறேன் தடபுடலாக இருக்கும் ,அவர்களின் வீடே களை
கட்டும் வந்திருப்பவரை கண்காட்சிபொருள் போல் பார்ப்பார்கள் சந்தேகம் வேண்டாம் நான் கிராமத்துக்காரன் ,நானும் அப்டி பார்த்திருக்கிறேன் அப்போதெல்லாம் நினைத்திருக்கிறேன் நானும் இப்படி ஒரு நாள் ப்ளேன் ல வந்து இறங்கணும்னு .சரி விஷயத்துக்கு வர்றேன் .அப்டியே என் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது ஆமாங்க இது ரெண்டாவது முறையா லீவுக்கு போறேங்க இதுல என்ன விஷயம் ?? இதுல ஒண்ணுமில்ல இருந்தாலும் என் முதல் விடுமுறை
அனுபவத்தை சொல்லணும்போல தோணிச்சு

போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி அம்மா கிட்ட போன் பண்ணி
எத்தன மணிக்கு வருவேன் அவுங்க எப்போ வரணும் ,என்ன பொருட்களெல்லாம் வாங்கி இருக்கேன் என்பதை சொன்னேன்,எல்லாவற்றையும் கேட்டுகொண்டே {அழுதாங்க ,சந்தோஷத் துலதான்} எய்யா நல்ல படியா வந்து சேருயா, ன்னு சொல்லிட்டு என்ன சாப்பாடு மக்கா வைக்கணும்ன்னு கேட்டாங்க .நான் ஒரு சா பி {சாப்பாட்டு பிரியன் }பழைய கஞ்சியும் கிழங்கு கரியும்னு சொன்னேன் ,சரி மக்கான்னு சொன்னாங்க .

இப்படியாக பயணம் ஆரம்பிச்சு வீடு போய் சேர்ந்தேன் அனா என்ன கூட்டிட்டுபோக என் அக்காவும் ,அத்தானும் {அக்கா கணவர்} அவர்களுடைய அம்பாசிடர் காரில் வந்திருந்தார்கள் .காலை 6 மணி ஆகி இருந்தது போற வழியில் அக்கா பாசத்திற்காக ஒரு கடையில் சாப்பிட்டோம் ,நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன் ,
வருவதற்கு முன் சில தொலை பேசி அழைப்புகள் எங்கு வந்து கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லிகொண்டிருந்தார்கள் .வீட்டு முன் வண்டி நின்றது அப்பா, அம்மா ,அண்ணன், அண்ணன் குழந்தைகள் ,தம்பி, கொஞ்சம் ஊர் பெரிசுகள் நின்று கொண்டிருந்தார்கள் எல்லோரையும் பார்த்து ஒரு குசலம் விசாரித்து விட்டு .அப்பா காலை தொட்டு வணங்கி எழும்பியபோது என் அம்மா, என்ன பண்ணுவாங்க ஒரே அழுகைதான் நானும் அது வரை சந்தோஷமாய் இருந்தவன் கண்ணீர் மல்கியது என்பார்களே
அந்த மாதிரி ஒரு சூழல் .எல்லோருக்கும் இனிப்புகளை எடுத்து கொடுத்தார்கள் .
அதே நேரத்தில் அம்மா நான் கேட்டிருந்த சாப்பாட்டை போட்டு வைத்து மொதல்ல சாப்டு மக்கா ன்னு ,சொல்லவே சரி கை கால் கழுகலாம் என்று நினைத்து ,சட்டையை கழற்றி கொண்டிருந்தேன்.
நண்பர்களே நான் இவ்ளோ நேரம் சொல்ல வந்ததே இதுக்காகத்தான்
கொஞ்சம் பொறுமையாக வாசித்து முடித்துவிடுங்கள்,

அந்த நேரத்தில் முதுகிலே லேசாக தட்டி ""டே இந்த நெல்லு மூட்டைய {சுமார் 3 மூட்டைகள் இருக்கும் }எடுத்து வண்டில போட்டுரு"" ன்னு அப்பா சொன்னார் .அப்டி திரும்புனேன்

.அக்காளுக்காக வாங்கி போட்டுருந்துச்சுடே நேத்துதான் நெல்லு காஞ்சுது கெட்டி வச்சோம்னு சொன்னார் பாருங்க .,மனசுக்குள்ளாடி நான் வெளிநாட்டுல இருந்து வந்து ரெண்டு மணிநேரம் கூட ஆகல இங்க என்ன நடக்கு !!!ஒரு மரியாத இல்ல நம்ம இவ்ளோ பெரிய காமெடி பீசோ ?? ன்னு நினச்சேன்,நல்லவேள தம்பி இத பாத்துட்டுவேண்டாண்டே நான் எடுத்து வைக்குறேன்னு சொன்னான் .இருந்தாலும் உதவி செய்தேன்.

அப்போ அத நினைக்க கொஞ்சம் காமெடியாகவே தோன்றியது .ஆனால் அவருடைய பாசத்தை {எங்க போனாலும் நீ எம்புள்ளடா ன்னு} அப்டி காண்பித்திருக்கிறார் என்று நினைத்து கொண்டு எனக்குள்ளே கொஞ்சம் அழுதுகொண்டேன் .இந்த முறை கிடைக்கும் மரியாதையை வரும் பதிவுகளில் சொல்லுகிறேன் .நான் ஊருக்கு போறேன்! ஊருக்கு போறேன்!! ஊருக்கு போறேன் !!!

Saturday, 9 January 2010

" புன்னகை மன்னன் "

நிலா முற்றத்தில் தினமும் நின்று
பறக்கும் என் கற்பனை காகிதத்தில்
மலரும் ஓர் அரும்பு கொண்டு
தென்றலின் கரம் பிடித்து -நானும்
சிலகாலமாய் எழுதினேன்


சிறப்பாய் ஒரு கவிதை
'கரங்கள் இன்றி அதை பிரித்து
கண்கள் இன்றி அதை படித்து
புரியாத மனதால் புரிந்து
புன்னகைப்பாய் என் மன்னனே'



அதிகாலையிலே உன்கரம் வந்தடைய
கொடுத்து விட்டேன் நிலாவிடம்
நீயும் வாங்க நினைக்கையிலே!


வீழ்ந்ததே என் கவிதை
மலர்களின் தோட்டத்திலே!
அதை பார்த்த பனித்துளிகள்
ஆர்வமாய் திருடி செல்ல


நனைந்ததே என் கவிதை
இனி நான் என் செய்வேன்?


சூரியனாய் நீ வந்து
பனித்துளிகளை மறைய செய்வாய்
இனி என் கவிதை தோட்டத்தில்
பனித்துளிகள் என்ற
எதிரிகள் இல்லாமல் ---சாஷீ

Wednesday, 6 January 2010

"வேட்டைக்காரன்"



சற்று தாமதமாகவே படம் பார்க்க நேரிட்டது நண்பர்களிடம் சொல்லவேண்டும் போல்தோன்றியது ,படத்தைப்பற்றிய கருத்து மட்டுமே, இளையதளபதி மேல் எந்த கடுப்பும் கிடையாது.

குருவி ,வில்லு வேட்டைக்காரன் அப்போ அடுத்த படம் பாசிமணி இல்ல ஊசிமணி ங்களா ஆபீசர்??

தலைப்பு வைத்து விட்டோமே என்பதற்காக ஆரம்பத்தில் ஒரு குதிரை சீனில் ஆரம்பித்த படம் ரெண்டு சீன்களிலேயே புரிந்து விட்டது.இந்த கதைய இப்பதானடா எங்கயோபாத்த மாதிரி இருக்குன்னு யோசிச்சா... புரட்சி தளபதி விஷால் {???எங்க போய் சொல்ல }நடிப்பில் வந்த சத்யம்,சீயான் நடிப்பில் வந்த பீமா என்ற இரண்டு மெகா டூப்பர் சூப்பர் ஹிட்!!!!! படங்களை கருத்தில் இல்லை இல்லை கையில் எடுத்து இவருக்கு ஏற்றமாதிரி கலந்தடிக்கிறார்கள் என்று பார்த்தால் சிமென்ட் தூணை உடைப்பதில் ஆரம்பிக்கிற காமெடி க்ளைமாசில் கார் ஸ்டீயரிங்கை கழட்டி வில்லன்களை அடிப்பதுவரை தொடர்கிறது.

தளபதியின் கால்கள் டயலாக் பேசும்போதுமட்டும் தரையில் நிற்கிறது, மனுஷர் பறந்து கொண்டே இருக்கிறார். படத்தின் கதை வேறொன்றுமில்லை "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியிதர்மமே வெல்லும் என்ற சூத்திரம்" தான்..முக்கிய செய்தி இந்த கதையை கில்லி படம் வரும்போதே இயக்குனர் சொன்னாராம்.

அந்த சூட்டோடு பல்லி ன்னு எடுத்திருக்கலாம் சரி போட்டு. வடிவேலு அண்ணன் இல்லையே என்ற வருத்தத்தையும் அவரே நீக்கி இருப்பதோடு அவருக்கு சவால் விடும் அளவுக்கு காமெடியில் பின்னி ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை புத்தாண்டு பரிசாக தந்திருப்பது பாராட்டுக்குரியதே.!!
வடிவேலு வுடன் நடித்த அனுபங்கள் கை கொடுத்திருக்கிறது.

கதாநாயகி "அருந்ததி அனுஷ்கா" மற்றவர்கள் போலவே நாயகனுடன் முதல் ஐந்து சீன்கள் முறைப்பதும்பின்னர் ஆறாவது சீனில் புடிச்சிருக்கு ன்னு சொல்ற தமிழ் சினிமா விதியில் அவர் என்ன பெரிய நடிப்பை காண்பிக்க முடியும்?,ஆனாலும் ஸ்ரேயாவுக்குபோட்டியிடும் அளவுக்கு இடுப்பை ஆட்டவைதிருக்கிரார்கள் வில்லனாக ஒரு பனங்கொட்டை தலயரை நடிக்க வைத்திருக்கிறாகள்.
அவுரு பயம் பயம்னு கதாநாயகன் காதுல சொல்லும்போது விட்டலாச்சாரியா படம் பாக்குறஉணர்வு {கொய்யால கொடும படுத்து ராய்ங்க} நம்மாட்களுக்கா பஞ்சம் வினு சக்கரவர்த்திய {ஆங் }விட்ருந்தா மனுஷன் பின்னிருப்பார்.
சக நடிகர் நடிகைகள் கனகச்சிதமாக அந்த அந்த பாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள் என்று சொன்னா அது ரொம்ப தப்பு, மாணிக்கவினாயகதுக்கு பதிலா லொள்ளு சபா மனோகர் இருந்தால் படம் விருதை நோக்கி நகர்ந்திருக்கும் என்பது என் கருத்து.

தேவராஜ் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடிதிருப்பவரை பார்க்கும்போதெல்லாம் வயிற்றில் அஜீரணம் ஏற்படுவது போல் ஒரு உணர்வு. இசையை பொறுத்தமட்டில் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் வி.ஆண்டனி.

"கரிகாலன்காலப்போல" பாடலில் கபிலனின் வரிகள் அடிக்கடி முணுமுணுக்க செய்கிறது. நடனத்தில் தளபதி தளபதிதான், பட்டையை கிளப்புகிறார், குறிப்பாக "ஒரு சின்ன தாமரை" பாடலில்அருமையான அசைவுகள் ???!!!!!???!!?? என்னதான் சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்க வாய்ப்பில்ல, .இதான் படத்தின் முடிவு என்ன சொல்ல வந்தாங்கன்னு கடைசி வர புரியல. உங்க நேரத்த வீண்டிசிட்டேன்னு நினைக்குறேன்... மன்னிச்சிக்குங்க.


நான் படம் பார்த்த அன்று தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் யாருக்கும் தெரியாமல் திரை அரங்கை ஒரு படம் எடுத்தார் உடன் வந்த அண்ணன் பதிவர் "தமிழன் எட்வின் "அது உங்கள் பார்வைக்காக மேலே .{ஹி ஹி மொத்தம் ஏழு பேர் பார்த்தோம் கவுண்டரில் நின்றவர் உட்பட ...இடம் __அஜியால் காம்ப்ளக்ஸ் .பாஹீல் குவைத் }

படம் பார்த்த பார்க்க இருக்கும் நண்பர்களே ஒரு சீன்லயாவது லாஜிக் என்ற விஷயம் இருக்கிறது என்று கண்டு பிடித்தால் சொல்லுங்க {என்னத்த கண்ணையா சொன்னமாதிரி இருக்கு அனா இல்ல } நன்றி மீண்டு{ம்} சந்திப்போம்.

Wednesday, 9 December 2009

இளைய நிலா பொழிகிறதே,,,,






என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இது ஓன்று ,..அதனாலோ என்னவோ இதை பாடி ஒரு வீடியோ போடும் அளவுக்கு வைத்தது ..எல்லாம் நண்பர்களின் உதவியோடுதான், திரைப்படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1980

பாடல் வரிகள்...
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
----------------------------------

முடிஞ்சா முழுவதும் கேளுங்க ,,

Friday, 27 November 2009

அந்த நாள் ஞாபகம்



எனக்கு நினைவில் தோன்றிய என் சின்ன வயது நினைவுகள் ,எங்க ஊர் வழக்கிலே எழுதிட்டேன்,, ஒரு நடுததர குடும்பத்தில் பிறந்தவன்,,அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா??.........நீங்களும் அப்டி இருந்தால் ஒரு வேளை இது உங்களுக்கும் ஒன்றி போகலாம்,,,,
எழுத்து பிழைகள் இருந்தால்??...,,,ஒண்ணுமில்ல நீங்களே திருத்தி படிச்சிக்குங்க ,,,..இனி..,,,,,,
அப்போசுமார் ஒன்பது அல்லது பத்து வயசு இருக்கும்,அந்த நாட்களில் காலையில் குளித்து விட்டு ஈரத்தலையோடு ,வந்து நின்னா அம்மா இங்க வா மக்கா தலைய ஒழுங்கா தொடச்சிக்க ,சளி,புடிச்சிரும்,அப்டின்னு சொல்லிட்டே தலையில் அவங்களோட சேலைய எடுத்து துடச்சி,,காத ,ஊதுவாங்க,, அப்றோம் அந்த மஞ்ச நிக்கர் ,எடுத்து போட்டு விட்டு ஒரு சட்டையும் போட்டு விடுவாங்க ,,,
இந்த நேரம் ,ஒரு கிழவி வெளிய இட்லி கொண்டு வரும் ..அத ஒரு தட்டுல வாங்கி,சட்னி கூட சிவப்பு கலர் ல இருக்கும்,,கிழவியும் கேக்கும் பள்ளியோடதுக்கு போறியா மக்கா ,,அம்மா அந்த இட்லிய பிசஞ்சு,தின்னு மக்கான்னு ,கூட போட்டிக்கு தம்பி வேற இதே situation ல நிப்பார் ,,,அந்தால, கைய கழுவிட்டு school,,,,
அங்க சில பல comedy கள் ,,முடிஞ்சி சாயங்காலம்,,வீடு வரும்போது, யா மக்கா சட்டய இப்புடி அழுகாகிருக்க,,,போய் கைய கால கழுவிட்டு ,,வா ,கிழங்கு அவிச்சி பானையில இருக்கு ,தின்னு ன்னு , அந்த நேரம் எனக்கு வேண்டாம் பொறவு திம்பேன் , சொல்லிட்டே நடையில நின்னுட்டு ,எம்மா நா கோயில் நடைக்கு வ்ளாட போறைன்,லே நில்லு மக்கான்னு அவுங்க ,போ மா ,ன்னு சொல்லிட்டு பயங்கர ஓட்டம் ,,
அங்க போனா ஒரு gang தயாரா இருக்கும் ,ஒருத்தன் மூக்கு ஒழுகிட்டு இருக்கும் ,ஒருத்தன் கரெக்டா சட்ட பட்டன் எல்லாத்தையும் தப்பா போட்டுருப்பான் ,,ஒரு பிள்ள petty code ன்னு ஒண்ணு போட்ருக்கும்.,,அனா கடைசில அந்த பிள்ள பயக்கள்ட்ட அடிவாங்கிட்டு,எல்லாருக்க வட்டபேரையும்,எல்லாரும் கேக்குறமாதிரி ,போல ஊழ மூக்கன் ,,வயித்தாளி,நக்கி,ன்னு அழுதுட்டே போகும்,,நம்மளும் பதிலுக்கு அவ பேர வச்சி வாயில வர்றதா அடிச்சி விடுறது ,,
அப்டி இப்டின்னு கள்ளம் போலீஸ் ,,ஐஸ் பால்,எல்லாம் வ்ளாடிட்டு,முக்கிய கட்டத்துல ஒருத்தன் சொல்லுவான் லே நீ out ன்னு ,,போல,ன்னு நம்ம,,சமந்தமே இல்லாம கோயில் ஆணை உடுல,ன்னு சொல்லுவான் ,,
நம்மளும் கோயில் ஆணை {சத்தியம்},,out இல்லன்னு சொல்லும்போது,,பக்கத்துல 2 கிழவன் மார்,இருந்துட்டு, சீ பெய உள்ளேளா,,கோயில கொண்டு ஆணை உடுறீங்களா ,,கொப்பன {அப்பா}கண்டுட்டு ன்னு பயமுறுத்துவார் ,இப்படிக்கும் அந்த கிழடுகள் கோயில் நடையில் இருந்து பீடி குடிப்பா இருக்கும் ,,
இப்டி சீரியஸா போயிட்டு இருக்கும்போது ,தம்பி வருவான் லே அண்ணா அப்பா வந்தாச்சு போ உன்ன கூட்டிட்டு வரசொல்லிச்சு,அங்க போன உடனே எப்பா அண்ணன் வந்துட்டான்,அவரு ஒரு மட மீசை வச்சிட்டு மூன்று முகம் வில்லன் செந்தாமரை மாதிரி ,விளையாட்டு கூடி போச்சு போய் மூஞ்ச கழுவிட்டு இப்போ புக் எ தொரந்துருக்கணும் ,கடைக்கி பேட்டு வர்றேன் ன்னு வெள்ள, வேஷ்டிய மடிச்சி கட்டிட்டு கிளம்புவார்.
அம்மா ராத்ரி சாப்பட்டுக்கு மீன் கரி வைக்கதுல மும்மரமா இருப்பாங்க ,,மெதுவா எம்மா அப்பாட்ட பொறி கடல வாங்க சொல்லுமா,,அவாள் நமக்கு வேண்டி மீன் கையோட எய்யா ,புள்ளேளுக்கு ,,,ன்னு சொல்லும்போதே,,அப்பா ஆங் ன்னு சொல்லிடு போவார்,,டக்குன்னு ,,ஓடி போய் அடுக்களை ல ,,போய் இது என்ன மீனு மா ,,அவாள் சாள,மீனு யா,நீ போய் படி ,,அப்பா இப்போ வந்துரும் மக்கான்னு,சொல்லிட்டு அம்மா உனக்கு சூடா கறி வச்சிதருவேன்,தம்பிய பாத்துக்க ,,அவன பாத்தா நல்ல உறக்கமாயிருக்கும்.
அப்பா வர்ற சத்தம்,,கேட்ட உடனே,தெரிஞ்ச ஒரு இங்கிலீஷ்,பாட்ட எடுத்து படிப்பு ,,i know a face,,i know a face,i know a face,ன்னு ஒரே லைன் எ ,அஞ்சு தடவ படிச்சிட்டு இருக்கும்போது ,,உள்ள வருவார் ,,புக் எ லைட்டா இறக்கிட்டு கையில கடல வாங்கியிருகாரான்னு பாத்துட்டு,,இருக்கும்போது அம்மா எய்யா சோற போடட்டா ,கொழம்பு கொதிச்சிட்டு ன்னு,,அப்போ பாருங்க ,அந்த வாசனைய புடிசிக்கிடே,நாக்குல தண்ணி ஊரும் இப்போ நினைச்சாலும்,ஊருது,,அப்பா போய் மெதுவா தம்பிய எழுப்புவாறு, அந்த நேரம் பானை , கரி சட்டி எல்லாம் நடு வீட்டுக்கு வரும் ,,
கீழ உக்காந்து சம்மணக்கால் போட்டு வயிறு முட்ட அடிக்கிறது ,,,அந்த நேரம் தம்பி ரெண்டு உருண்ட தின்னுட்டு அம்மா மடியிலே உறங்கிருவான் ,,பக்கத்துல அப்பா சாப்டுவாறு அவர் தட்டுல 3 மீனு இருக்கும் அதுல பக்குவமா முள்ள எடுத்து நம்ம தட்டுல வச்சி,தின்னு மக்கா ன்னு ,சொல்லுவார்,அத இப்போ நினைச்சாலும் கண், கலங்க்குடு அப்ப அப்ப .திட்டுனாலும்,பாசத்த காமிக்கும் போது,அம்மாக்களையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள் .
எல்லாம் முடிச்சிட்டு தூங்க போரமுன்னாடி ,அம்மா மக்கா போய் ,ஒண்ணுக்கு இருந்துட்டு வந்து படு ன்னு, அந்தால இருந்துட்டு வந்து பாய ,போட்டு கால தூக்கி அம்மாக்க மடியில போட்டு ,,தூங்குனா,வருமே,,ஒரு தூக்கம்,கொய்யால,கோடி ரூவா குடுத்தாலும்,கிடைக்காது,,,எல்லாம்,,ஒரு சுகமான நேரங்கள்